தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களை பன்முக சேவை மையங்களாக செயல்படுத்தும் திட்டம் - அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களை பன்முக சேவை மையங்களாக செயல்படுத்தும் திட்டம் - அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

    நபார்டு வங்கி நிதி உதவியுடன் தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களை பன்முக சேவை மையங்களாக செயல்படுத்தும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

    சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்.இது தொடர்பான அனுமதி கடிதத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ.தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்ச்யில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ.தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கிகள் ஒருங்கிணைந்த வங்கி சேவை திட்டத்துக்கு (கோர் பேங்கிங் சொல்யூசன்ஸ்) நபார்டு வங்கி நிதி உதவி வழங்குவதைப் போன்று.தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்குவதற்கு உதவ வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில்.தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த கடாரியா.நுகர்வோர் நல பதிவாளர் கிரேஸ் எல். பசுவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலக்கதை