பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு: முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வாழ்த்து.!!!

தினகரன்  தினகரன்
பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு: முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வாழ்த்து.!!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. பாஜ 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதர கூட்டணி கட்சிகளும் சில இடங்களை பிடித்தன. தொடர்ந்து, நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம், தொடர்ந்து 4-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் குமார் கடந்த 16-ம் தேதி பதவியேற்று கொண்டார். அவருடன் 14 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.இந்நிலையில், பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ விஜய் சின்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவை சேர்ந்த ஒருவர் பீகார் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. தொடர்ந்து, சபாநாயகராக தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ விஜய் சின்காவிற்கு முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மூலக்கதை