மிஸ்டர் அப்ரிடி இப்படி லேட்டா வந்தா எப்படி!

தினகரன்  தினகரன்
மிஸ்டர் அப்ரிடி இப்படி லேட்டா வந்தா எப்படி!

லங்கா பிரிமியர் லீக் டி20 தொடர் இலங்கையின் அம்பாந்தோட்டை நகரில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் களமிறங்கும் காலே கிளேடியட்டர்ஸ் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி நேற்று முன்தினம் இலங்கை செல்வதாக இருந்தது. ஆனால், தாமதமாகப் புறப்பட்டதால் விமானத்தை தவறவிட்ட அவர், இன்று தான் கொழும்பு சென்று சேர்ந்துள்ளார். குவாரன்டைன் கட்டாயம் என்பதால், காலே அணி விளையாடும் முதல் 2 லீக் ஆட்டங்களில் அப்ரிடி களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக துணை கேப்டன் பானுகா ரஜபக்ச தலைமையில் காலே அணி விளையாட உள்ளது. முன்னதாக இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, எல்பிஎல் தொடருக்கு முழுமையாகத் தயாராகவில்லை என்று கூறி கடைசி நேரத்தில் ஜகா வாங்கினார். இதைத் தொடர்ந்தே அப்ரிடி கேப்டனானார். அவரும் பயண திட்டத்தில் சொதப்பி தாமதமாக வந்து சேர்வது காலே அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை