ஆஸி. தொடர் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும்: பும்ரா சொல்கிறார்

தினகரன்  தினகரன்
ஆஸி. தொடர் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும்: பும்ரா சொல்கிறார்

சிட்னி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒருநாள் தொடர் துவங்கவுள்ள நிலையில் அணி வீரர்கள் அதற்கென தயாராகி வருகின்றனர். கடந்த 2018 -19ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அந்த அணியுடனான டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்த தொடரில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில் அவர் நாதன் லியோன் இருவரும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தனர். இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜஸ்பிரீத் பும்ரா, ``சிறப்பான அணியுடன் விளையாடும்போதுதான் நம்மிடம் இருக்கும் சிறப்பான திறமைகள் வெளிப்படும்.மேலும் நெருக்கடி சூழல்களை சந்திக்கும் வலிமையும் கிடைக்கும். இந்தியாவில் தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, தற்போது வெளிநாட்டில் முதல் முறையாக இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் மிகுந்த சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும். பகலிரவு போட்டியும் சிறப்பானதாக அமையும். பந்தை துடைப்பதற்கு எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை டெஸ்ட் போட்டிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் வெள்ளை பந்து போட்டிகளில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகாது என்று கூறிய பும்ரா அதனால் எச்சில் பயன்பாடு இல்லையென்றாலும் சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மூலக்கதை