20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து?

தினமலர்  தினமலர்
20 டாலர் விலையில் கிடைக்குமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து?

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பலவற்றில் தடுப்பு மருந்து சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஷ்யா ஸ்பூட்நிக் 5 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருந்தது. இந்தத் தடுப்பு மருந்தை தனது மகளுக்கு செலுத்தி சோதனை செய்து தன்மகள் உடல்நலம் பெற்றதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.


தற்போது அமெரிக்காவின் மாடர்னா, பைஸர், ஜெர்மனியின் பயான்டெக் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் உலக அளவில் மூன்றாம் கட்ட சோதனையை முடித்து விற்பனைக்கு தயாராகி வருகின்றன. வரும் ஜனவரி மாதம் தடுப்பு மருந்துகளை உலக நாடுகளிடம் விற்க கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து இந்தியாவில் 500-600 ரூபாய் விலையில் விற்கப்பட வாய்ப்பு உள்ளது என முன்னதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து தற்போது ரஷ்யாவின் ஸ்பூட்நிக் ஐந்து தடுப்பு மருந்து உலக நாடுகளில் 20 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்புப்படி ஒரு டோஸ் ரஷ்ய தடுப்பு மருந்து 1,750 ரூபாய் விற்கப்பட வாய்ப்பு உள்ளது.


தடுப்பு மருந்து நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க அதிரடி ஆஃபர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் பொருட்கள் வாங்குவது போன்று எதிர்காலத்தில் தடுப்பு மருந்துகள் வாங்க மக்கள் கூட்டம் முண்டியடிக்கலாம் என வேடிக்கையாக கூறப்படுகிறது.

மூலக்கதை