இந்தியாவில் ஜி20 மாநாடு 2023ம் ஆண்டு நடக்கும்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் ஜி20 மாநாடு 2023ம் ஆண்டு நடக்கும்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜப்பானின் ஓசாகா மாகாணத்தில் ஜி20 மாநாடு நடைபெற்றது. அப்போது 2022ம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் ஜி20 உச்சி மாநாடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த மாநாடு நேற்று முன்தினம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த மாநாடுகள் நடக்க உள்ள நாடுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், அடுத்த ஆண்டு இத்தாலியிலும், 2022ம் ஆண்டு இந்தோனேஷியாவிலும், 2023ம் ஆண்டு இந்தியாவிலும், 2024ம் ஆண்டு பிரேசிலிலும் ஜி20 மாநாடு நடைபெறும் என ரியாத் மாநாட்டு தலைவர் அறிவித்துள்ளனர்.

மூலக்கதை