ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து எப்போது இந்தியாவில் கிடைக்கும்?

தினமலர்  தினமலர்
ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து எப்போது இந்தியாவில் கிடைக்கும்?

அமெரிக்காவின் பைசர், மாடர்னா தடுப்பு மருந்துகள் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனை நிலையில் உள்ளன. விரைவில் இவை விற்பனைக்கு வர உள்ளன.


அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை சோதனை செய்து வருகிறது. இதனை அடுத்து மாடர்னா, ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை சோதனை செய்யும். இதுகுறித்து ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்தின் நிறுவனர் பாஸ்கல் சூரியட் கூறுகையில் இன்னும் சில வாரங்களில் எப்டிஐ ஆஸ்ட்ராசெனேகாவை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.


இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் எளிதில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய தடுப்புமருந்து ஆஸ்ட்ராசெனேகா. இதனால் இங்கு இந்தத் தடுப்பு மருந்தின் விற்பனை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து எப்போது இந்தியாவில் வெளியிடப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்தத் தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை