ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-ஐதராபாத் இன்று மோதல்

தினகரன்  தினகரன்
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாஐதராபாத் இன்று மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த 3வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் 27வது நிமிடத்தில் பெங்களூருவின் கிளைடான் சில்வா தலையால் முட்டி கோல் அடித்தார். 57வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஜூவானன் கோல் அடிக்க 2-0 என பெங்களூரு முன்னிலை பெற்றது. ஆனால் ஆக்ரோஷமாக ஆடிய கோவா அணியினர் 66 மற்றும் 69வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் போட்டு பதிலடிகொடுத்தனர். தொடர்ந்து கோல் எதுவும் அடிக்கப்படாததால் 2-2 என போட்டி டிராவில் முடிந்தது. இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஒடிசா-ஐதராபாத அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை