ஈரான் அணுஆயுத சோதனையைத் தடுக்க ஜோ பைடன் முயற்சி

தினமலர்  தினமலர்
ஈரான் அணுஆயுத சோதனையைத் தடுக்க ஜோ பைடன் முயற்சி

வரும் நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஜோ பைடன் 306 நாடாளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 20-ஆம் தேதி அவர் அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தான் அதிபராகப் பொறுப்பேற்ற பின் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து தற்போது ஆலோசித்து வருகிறார்.


முக்கியமாக வெளியுறவு துறை செயல்பாடுகள் குறித்து அவர் ஆராய்ந்து வருகிறார். ஒபாமா ஆட்சி காலத்தில் ஈரானுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்கள் இடப்பட்டன. ஆனால் தொடர்ந்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக ஈரான் அமெரிக்காவிற்கு பகை நாடாக மாறியது.
தற்போது நிலைமையை சீர் செய்ய ஜோ பைடன் முயன்று வருகிறார். ஈரானில் உள்நாட்டு பயங்கரவாதம் நிலவி வருகிறது. இதனை தடுக்க அமெரிக்காவின் உதவியை ஈரான் எதிர்பார்க்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் திங்களன்று ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஈரான் அணு ஆயுத சோதனை தடுப்பு, பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்டவற்றை விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்துக்கு அனைத்து நாடுகளும் கட்டுப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் சில நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஈரான் அமெரிக்காவை எதிர்கொள்ள மறைமுகமாக அணு ஆயுத சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு வியன்னா ஒப்பந்தம் இடப்பட்டது. அணு ஆயுத தடுப்புக்காக இடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் மேற்கண்ட மூன்று நாடுகளும் கையெழுத்திட்டன.


ஈரான் தனது அணு ஆயுத சோதனையை குறைத்துக்கொள்வதாக முன்னதாக உறுதி அளித்தது. இதற்கு பதிலாக அமெரிக்கா தனது சர்வதேச நிதியை அதிகரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் இட்டது. ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்பந்தத்தில் இருந்து வெளியே விலகினார். தற்போது ஜோ பைடன் அணு ஆயுதத் தடுப்புக்காக இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணையத் திட்டமிட்டுள்ளார்.

மூலக்கதை