சூர்யகுமார் இடம் பெறாதது ஏன்: பிரையன் லாரா ஏமாற்றம் | நவம்பர் 23, 2020

தினமலர்  தினமலர்
சூர்யகுமார் இடம் பெறாதது ஏன்: பிரையன் லாரா ஏமாற்றம் | நவம்பர் 23, 2020

மும்பை: ‛‛ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்,’’ என, லாரா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக கடந்த மூன்று சீசன்களில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சூர்யகுமார் யாதவ். 13வது ஐ.பி.எல்., சீசனில் இவர், 480 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படவில்லை.

இதுகுறித்து விண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியது:

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படாததிற்கு இவரிடம் எவ்வித குறையும் இல்லை. சிறந்த வீரரான இவர், சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். நிறைய ரன் சேர்த்தார் என்பதற்காக மட்டும் இவரை தேர்வு செய்ய வலியுறுத்தவில்லை.

இவரது ‛பேட்டிங்’ தொழில்நுட்பம், நெருக்கடியை கையாண்ட விதம், ‛பேட்டிங்’ வரிசை போன்றவற்றை முக்கியமாக கருதுகிறேன். ‛பேட்டிங்’வரிசையில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார், ரோகித் அல்லது குயின்டனுக்கு மாற்றாக துவக்க வீரராகவும் விளையாடினார். எந்த ஒரு அணியிலும் 3வது இடத்தில் களமிறங்கும் வீரர் சிறந்தவராக மட்டுமே இருக்க முடியும். எனவே இவரை தேர்வு செய்திருக்க வேண்டும்.இவ்வாறு லாரா கூறினார்.

மூலக்கதை