ஆஸி., தொடர் மீது எதிர்பார்ப்பு: சுப்மன் கில் உற்சாகம் | நவம்பர் 23, 2020

தினமலர்  தினமலர்
ஆஸி., தொடர் மீது எதிர்பார்ப்பு: சுப்மன் கில் உற்சாகம் | நவம்பர் 23, 2020

சிட்னி: ‛‛ஆஸ்திரேலிய தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது,’’ என, சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று ‛டுவென்டி–-20’, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் ஒருநாள், டெஸ்ட் தொடருக்கு இளம் இந்திய வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர், சமீபத்தில் முடிந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் கோல்கட்டா அணி சார்பில் 14 போட்டியில், 440 ரன்கள் குவித்தார். முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட உள்ளார்.

இதுகுறித்து ‛டுவிட்டரில்’ சுப்மன் கில் வெளியிட்ட செய்தியில், ‛‛ஆஸ்திரேலிய தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஏனெனில் இது எனது முதல் ஆஸ்திரேலிய பயணம். இளம் வயதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிகளை பார்த்திருக்கிறேன். தற்போது இங்கு விளையாட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. தவிர, அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இத்தொடருக்காக எவ்வித இலக்கும்  நிர்ணயிக்கவில்லை,’’ என, தெரிவித்திருந்தார்.

மூலக்கதை