காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதி: பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதி: பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் நக்ரோடாவில் கடந்த வியாழக்கிழமை, வாகனத்தில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளின் சதி திட்டத்தை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த அந்த தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விரைவில் காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதை சீர்குலைக்கும் திட்டத்துடன் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, தூதரக உயர் அதிகாரி ஆஜரானார். அவரிடம் வெளியுறவுத் துறை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பிராந்தியத்தில் தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை