கேரள அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்: சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை

தினகரன்  தினகரன்
கேரள அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்: சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்: சமூக வலைத்தளங்களில் பிறர் மனது புண்படும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 2000ல் தகவல் தொழில்நுட்ப  சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதுபோல கேரளாவில் போலீஸ் சட்டம் 118 (டி)ம் இருந்து வந்தது. ஆனால் இவை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவை என கூறி, கடந்த 2011ல் உச்சநீதிமன்றம் அந்த சட்டங்களை ரத்து செய்தது. இந்த நிலையில் கேரளாவில் சமூக வலை தளங்களில் ஆபாச கருத்துக்களை தெரிவிப்பது, மிரட்டுவது உட்பட சைபர் குற்றங்கள் அதிகரித்தன. இதையடுத்து புதிய அவசர சட்டம் கொண்டுவர கேரள அரசு தீர்மானித்தது. இதன்படி தனிநபரை சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டுபவர்கள், அவமானப்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, ₹10,000 அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இந்த அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மூலக்கதை