குளிர்கால தொடர் நடக்குமா? லோக்சபா சபாநாயகர் தகவல்

தினமலர்  தினமலர்
குளிர்கால தொடர் நடக்குமா? லோக்சபா சபாநாயகர் தகவல்

புதுடில்லி : ''பார்லி., குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, லோக்சபா செயலகம் தயாராக உள்ளது. இதற்கான தேதிகளை அரசு முடிவு செய்யும்,'' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.


டில்லியில் நேற்று நிருபர்களிடம், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரையும், பாதுகாப்புடன் நடத்துவது பற்றி, நிலைக்குழுக்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.


குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, லோக்சபா செயலகம் தயாராக உள்ளது. எனினும், கூட்டத்தொடருக்கான தேதிகளை, மத்திய அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, கூட்டத்தொடருக்கான தேதியை, அரசு முடிவு செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை