தபாலில் ஓட்டளிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும்

தினமலர்  தினமலர்
தபாலில் ஓட்டளிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும்

சென்னை :'மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டளிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும்' என, தேர்தல் ஆணையத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:பீஹார் மாடல் தேர்தல் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தனிப்பட்ட உரிமைஇது, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்போரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக, ஓட்டுப்பதிவில், சாதகமான சூழல் உருவாக்கப்படுகிறது.

பீஹார் மாநில தேர்தல் வாயிலாக, ஓட்டுச்சாவடிக்கு வராத வாக்காளர்கள் என்ற புதிய வகை, ஓட்டுப்பதிவு முறையை கண்டுபிடித்து, திணிக்கப்பட்டுள்ளது.ஓட்டு அளிப்பது, ஒருவருடையை ரகசியமான

தனிப்பட்ட உரிமை.அதைப் பாதிக்கும் வகையில், நேரடியாக தபால் ஓட்டு சீட்டுக்களைக் கொண்டு போய் கொடுத்து, ஓட்டுக்கள் பதிந்து பெறப்படுகிறது.இந்த நடைமுறை, ரகசியமான, சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும், பார்வைக்கு வைக்கப்படும் கடைப் பொருட்களாக்கி, கேலிக்கூத்தாக்கி விடும்.

பேராபத்துமூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என, ஓட்டு அளிக்க வராத, 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்களை பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், பகிரங்கமாக அபகரித்துக் கொள்ளும். இந்த முயற்சிக்கு தேர்தல் ஆணையமே, துணை போவது பேராபத்தான போக்கு. எனவே, தபால் ஓட்டு அளிக்கும் முறை என்ற பாசக் கயிறு சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை