சசிகலா பற்றிய படம், ராம்கோபால் வர்மா புதுத் தகவல்

தினமலர்  தினமலர்
சசிகலா பற்றிய படம், ராம்கோபால் வர்மா புதுத் தகவல்

தென்னிந்தியத் திரையுலகத்தில் சமீப காலமாக பயோபிக் படங்கள் எடுப்பது வழக்கமாகி உள்ளது. தெலுங்கில் மகாநடி படம் வந்து வரவேற்பைப் பெற்ற பிறகு பலருக்கும் அப்படியான படங்களை எடுக்க ஆசை வந்துவிட்டது.

ஏற்கெனவே சர்ச்சைக்குரிய படங்களை எடுத்து சர்ச்சை இயக்குனர் எனப் பெயரெடுத்து தெலுங்கு இயக்குனரான ராம்கோபால் வர்மா சசிகலா பற்றிய பயோபிக் படத்தை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். இப்போது அப்படம் பற்றிய புதுத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


“ இப்படம் S என்ற பெண்ணும், E என்ற ஆணும் ஒரு லீடருக்கு செய்தது பற்றியது. தமிழ்நாடு தேர்தலுக்கு முன்பாக அந்த லீடரின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் இந்தப் படமும் வெளியாகும்.

நீங்கள் ஒருவருக்கு நெருக்கமாக இருந்தால், அவரைக் கொல்வது எளிது - பழைய தமிழ் சொல்கிறது...” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


லட்சுமியின் என்டிஆர் படத்தைத் தயாரித்த ராகேஷ் ரெட்டி சசிகலா படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படம் ஜெ, எஸ் மற்றும் இபிஎஸ் இடையேயான மிகவும் சிக்கலான மற்றும் சதி உறவைப் பற்றியதாக இருக்கும்.

மூலக்கதை