தேர்தல் தோல்வி; அமெரிக்க கருப்பின மக்கள்மீது குற்றஞ்சாட்டும் டிரம்ப்

தினமலர்  தினமலர்
தேர்தல் தோல்வி; அமெரிக்க கருப்பின மக்கள்மீது குற்றஞ்சாட்டும் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதனை அடுத்து அங்கு ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி பெற்றது.


வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறார்.
குறிப்பிட்ட சில மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்ததாகவும் தனது வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி வருகிறார். குடியரசு கட்சி வழக்கறிஞர்கள் தொடர்ந்து அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் தேர்தல் முறைகேடு வழக்கை தொடர்ந்து வருகின்றனர்.
ஆட்சி மாற்றக்குழு எவ்வளவு முயன்றும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுக்கிறார். மறுபக்கம் ஜோ பைடன் தான் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், அமெரிக்காவில் அதிகரித்துவரும் கொரோனாவை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிடத் துவங்கிவிட்டார்.
தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் வெறுப்பு அமெரிக்க கருப்பின மக்கள்மீது விழுந்துள்ளது. டிரம்பின் ஆட்சிக்காலத்தில் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் புளாயிட் என்ற கருப்பின நபர் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கருப்பின மக்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை இனவாதத்தை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி வந்தனர்.


தற்போது கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில்தான் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக டிரம்ப் தரப்பு குற்றம் சாட்டி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க கருப்பின மக்களை சட்டத்துக்கு புறம்பான விஷயங்களைச் செய்யும் குற்றவாளிகள் என்று ட்ரம்ப் மறைமுகமாக குற்றம்சாட்டுவதாகக் கூறப்படுகிறது.

மூலக்கதை