அரசின் தைரியமான சீர்திருத்தங்கள் பாராட்டிய முகேஷ் அம்பானி

தினமலர்  தினமலர்
அரசின் தைரியமான சீர்திருத்தங்கள் பாராட்டிய முகேஷ் அம்பானி

காந்தி நகர்:பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் நம்­பிக்கை, தேசத்தை ஊக்­கப்­ப­டுத்­தி­யுள்­ளது என்­றும், அர­சின் தைரி­ய­மான சீர்­தி­ருத்­தங்­கள், முன்­னேற்­றத்­துக்கு வழி­வ­குக்­கும் என்­றும், ‘ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ்’ நிறு­வ­னத்­தின் தலை­வர் முகேஷ் அம்­பானி தெரி­வித்­துள்­ளார்.

முன்னேற்றம்

பண்­டிட் தீன்­த­யாள் பெட்­ரோ­லி­யம் பல்­க­லைக்­க­ழக பட்­ட­ம­ளிப்பு விழா­வில் பங்­கேற்று, காணொலி மூலம் பேசிய அவர், மேலும் கூறி­ய­தா­வது:அரசு மேற்­கொண்ட தைரி­ய­மான சீர்­தி­ருத்­தங்­கள் விரை­வான மீட்­புக்­கும், அடுத்து வரும் ஆண்­டு­களில் விரை­வான முன்­னேற்­றத்­திற்­கும் வழி­வ­குக்­கும்.கொரோனா தொற்று நோய்க்கு எதி­ரான போராட்­டத்­தில், இந்­தியா ஒரு முக்­கி­ய­மான கட்­டத்­திற்­குள் நுழைந்­துள்­ளது. இந்த சம­யத்­தில், நம் பாது­காப்பை நாம் குறைக்க முடி­யாது.

இந்­தியா ஒரு புரா­தன நாடு. இது, கடந்த காலங்­களில் பல இடர்ப்­பா­டு­களை எதிர்­கொண்­டி­ருக்­கிறது. ஒவ்­வொரு முறை­யும், மிக­வும் வலு­வாக மீண்­டும் எழுந்­து உள்­ளது.


வாய்ப்பு

எதை­யும் எதிர்­கொண்டு மீள்­வது என்­பது, இந்­திய மக்­கள் மற்­றும் கலா­சா­ரத்­தில் ஆழ­மாக வேரூன்­றி­யுள்­ளது.பொரு­ளா­தார வளர்ச்சி, இதற்கு முன் கண்­டி­ராத வாய்ப்­பு­களை
உரு­வாக்­கும். அடுத்த, 20 ஆண்­டு­களில், உல­கின் முதல் மூன்று பொரு­ளா­தா­ரங்­களில் ஒன்­றாக இந்­தியா இருக்­கும்.பொரு­ளா­தார வல்­ல­ர­சாக மாறும் அதே­ச­ம­யத்­தில், துாய்மை மற்­றும் பசுமை ஆற்­றல் வல்­ல­ர­சா­க­வும் மாறு­வது என, ஒரே நேரத்­தில், இரட்டைஇ­லக்­கு­களை அடைய இந்­தியா முயற்­சிக்க வேண்­டும்.இவ்­வாறு, அவர் கூறி­னார்.

மூலக்கதை