பயங்கரவாதத்தை ஒடுக்க ஜோ பைடன் அரசு ஆதரவுக்கரம் நீட்டுமா?

தினமலர்  தினமலர்
பயங்கரவாதத்தை ஒடுக்க ஜோ பைடன் அரசு ஆதரவுக்கரம் நீட்டுமா?

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஆட்சி செய்து வருகிறது. அவ்வப்போது ஆப்கன் அரசுடன் போர் செய்து வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை வாபஸ் பெற்ற பின்னர் தாலிபான்களை எதிர்த்து போராட ஆப்கான் அரசு திணறி வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தாலிபான்கள் உடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கண்டாகார் நகரை கைப்பற்ற தாலிபான் முயற்சி மேற்கொண்டது. இதனையடுத்து காபூல் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியது. இதில் மாணவர்கள் பலர் உயிரிழந்தனர். தாலிபான்கள் அவ்வப்போது ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

ஐநா, நேட்டோ, அமெரிக்கா உள்ளிட்ட பல சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் நாடுகள் இருக்கும்போதும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் பயங்கரவாத செயல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது வருத்தமளிக்கிறது என்று ஆப்கானிஸ்தான் அரசியல் ஆர்வலர் அகமது ஷாதி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை தடுக்க ஐநா முயற்சி மேற்கொள்ள வேண்டும் என ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அஷ்ரப் கனியின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தாலிபான் படையினர் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அமையவுள்ள ஜோ பைடன் அரசு ஆப்கானிஸ்தானில் நிலவும் பயங்கரவாத செயல்களைத் தடுக்க என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அஷ்ரப் கனியின் அமைச்சர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஏற்கனவே பயங்கரவாதத்திற்கு எதிராக ஒபாமா ஆட்சி காலத்தில் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை