'மாநாடு' பர்ஸ்ட் லுக் வெளியீடு

தினமலர்  தினமலர்
மாநாடு பர்ஸ்ட் லுக் வெளியீடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'மாநாடு'. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க, இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டு உருவாகி வரும் இப்படம் பல தடைகளை கடந்து துவங்கியது. இடையில் கொரோனா பிரச்னை வர நின்று போனது. இந்தக்காலக்கட்டத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார் சிம்பு. தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அப்துல் காலிக் என்ற முஸ்லீம் இளைஞனாக சிம்பு நடிக்கிறார். போஸ்டரில் சிம்பு தொழுவது போன்றும், தலையில் ரத்தம் வடிய, நெற்றியில் துப்பாக்கி கொண்டு பாய்ந்தபடி இருக்கிறார். பின்னணியில் அரசியல் தலைவர்களின் கட்-அவுட் தென்படுகிறது. போஸ்டரே வித்தியாசமாக இருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன் ராஜா இசையமைக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

மூலக்கதை