அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அரசு விழாவில் அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அதிமுக  பாஜக கூட்டணி தொடரும் என்று அரசு விழாவில் அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இனிவரும் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அரசு விழாவில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேசவே அமித்ஷா வந்துள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார். அரசு விழாவில் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிட்டார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை தொடங்க அமித்ஷாவை அழைத்தது அரசு. பாஜக மாநில தலைவர் முருகன், ஏ.கே.மூர்த்தி (பா.ம.க), தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ் பங்கேற்றுள்ளனர். நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா என்றும் துணை முதல்வர் பி.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

மூலக்கதை