அமெரிக்காவுடன் தைவான் பொருளாதார ஒப்பந்தம்; அதிருப்தியில் சீனா

தினமலர்  தினமலர்
அமெரிக்காவுடன் தைவான் பொருளாதார ஒப்பந்தம்; அதிருப்தியில் சீனா

வாஷிங்டன்: அமெரிக்காவும் தைவானும் தொடர்ந்து நட்பு பாராட்டி வருவது சீனாவை முன்னதாக அதிருப்தி அடையச் செய்து இருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தைவானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க மாகாண செயலாளர் மைக் பாம்பியோ குவாட் நாடுகளை ஒன்றிணைத்து தைவானுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தைவானில் அமல்படுத்தி அதனை கையகப்படுத்த முயன்றது. இதற்கு தைவான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சீனாவின் பிடியில் இருந்து தப்புவதற்காக தைவான் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தைவான்-அமெரிக்கா ஆகிய நாடுகளின் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


இதற்கு சீனா கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடிவெடுத்துள்ளது. சிறிய தீவு நாடான தைவான் தகவல் தொழில்நுட்பத்தில் அதிக வளர்ச்சி கண்ட நாடு. முன்னதாக சீன ராணுவத்தை எதிர்க்க தைவான் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் சிலவற்றை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை