சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் அமித்ஷா பங்கேற்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் அமித்ஷா பங்கேற்பு

சென்னை: சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் அமித்ஷா பங்கேற்றுள்ளார். ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமித்ஷாவுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அமைச்சர் சம்பத், பேரவைத் தலைவர் தனபால் உள்ளிட்டோரும் அமித்ஷாவுக்கு பொன்னாடை போர்த்தினர்.

மூலக்கதை