அமித்ஷா வருகையால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தினகரன்  தினகரன்
அமித்ஷா வருகையால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: அமித்ஷா வருகையால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அமித்ஷாவை வரவேற்க வந்தவர்களை விட பாதுகாப்புக்காக அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இருந்து அரசு விழா நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு அமித்ஷா புறப்பட்டார். காலையில் பதாகை வீசப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்ட உள்ளார். ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.

மூலக்கதை