மகளின் பிகினி புகைப்படத்தை எடுத்த அப்பா

தினமலர்  தினமலர்
மகளின் பிகினி புகைப்படத்தை எடுத்த அப்பா

தமிழ் சினிமாவில் கிளாமர் என்பது ஹிந்தி நடிகைகள் இங்கு அதிக அளவில் வரும் வரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அவர்கள் வருகைக்குப் பின் இருந்த தாராளமயமாக்கலில் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. தென்னிந்திய நடிகைகளை அந்த ஒரு விஷயத்தில் ஓரம்கட்டிவிட்டு ஹிந்தி நடிகைகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள்.

சமூக வலைத்தளங்களிலும் ஹிந்தி நடிகைகள் பதிவிடும் பலவிதமான கிளாமர் மற்றும் கவர்ச்சிப் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தருவதாகவே உள்ளன.

தமிழ், தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது குடும்பத்தினருடன் மாலத்தீவிற்குச் சென்றுள்ளார். நீச்சல் உடை அணிந்த புகைப்படம் ஒன்றை நேற்றுப் பகிர்ந்திருந்தார்.

இன்று பிகினி உடை புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தை எடுத்தது தன் அப்பா எனவும் தகவல் தெரிவித்துள்ளார் ரகுல். அந்தப் புகைப்படத்திற்கும் 2 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸ் கொடுத்துள்ளனர்...ம்ம்ம்ம்...

மூலக்கதை