கன்னட இயக்குனர் சாஹூராஜ் ஷிண்டே மரணம்

தினமலர்  தினமலர்
கன்னட இயக்குனர் சாஹூராஜ் ஷிண்டே மரணம்

பிரபல கன்னட இயக்குனர் சாஹூராஜ் ஷிண்டே, அர்ஜூன் ஆதித்யா, சினேகனா ப்ரீத்தினா, உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். தற்போது சாம்பியன் என்ற படத்தை இயக்கி வந்தார். இதில் பிரவீன் தேஜ், அனுபமா கவுடா நடித்து வந்தனர். படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் சாஹூராஜ் ஷிண்டே பட வேலை தொடர்பாக நேற்று மும்பை செல்ல தயாரானார், அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். மருத்துவ குழுவினர் வந்து சேர்வதற்குள் வீட்டிலேயே மரணம் அடைந்தார். 50 வயது ஷிண்டேவின் மரணம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை