சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கில் தர்ஷனுக்கு முன்ஜாமீன்

தினமலர்  தினமலர்
சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கில் தர்ஷனுக்கு முன்ஜாமீன்

நடிகை சனம் ஷெட்டி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற தர்ஷனை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி தன்னிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டதாக கூறி சனம் ஷெட்டி போலீசில் புகார் செய்ததோடு வழக்கும் தொடுத்தார். இந்த நிலையில் சனம் ஷெட்டி, தன் மீது பொய் புகார் கொடுத்திருப்பதாகவும் அதனால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் தர்ஷன் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஒரு வாரத்திற்கு தினமும் காலை 10.30 மணிக்கு திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும், அதன்பிறகு மறு உத்தரவு வரும் வரை திங்கள் கிழமை மட்டும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

மூலக்கதை