சினிமா வேண்டாம்: அறிமுக நடிகை திடீர் முடிவு

தினமலர்  தினமலர்
சினிமா வேண்டாம்: அறிமுக நடிகை திடீர் முடிவு

சமீபத்தில் வெளியான படம் மரிஜூவானா. எம்.டி.ஆனந்த் என்ற புதுமுகம் இயக்கிய இந்தப் படத்தில் அட்டு படத்தில் நடித்த ரிஷி ரித்விக் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தவர் ஆஷா பார்த்தலோம். இவர் இந்த ஒரு படத்துடன் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நான் பக்கா தமிழ் பொண்ணு, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவள் என்பதால் என் பெயர் ஆஷா பார்த்தலோம். நான் ஐடி துறையில் கம்ப்யூட்டர் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறேன். லட்சக் கணக்கில் சம்பளம் பெறுகிறேன். ஒரே ஒரு சினிமாவில் நடித்து அந்த அனுபவத்தை பெற வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக எனது படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன். அதை பார்த்து தான் மரிஜூவானா பட வாய்ப்பு வந்தது.

முதல் படத்திலேயே போலீஸ் அதிகாரியாக நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு குழுவினர் என்னை ஒரு மகளை போல பார்த்துக் கொண்டார்கள். சினிமாவை விட நான் பார்க்கும் வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால் எனது பணியில் கவனம் செலுத்தப் போகிறேன். பணியில் இருக்கும்போதே விடுமுறை எடுத்துதான் படத்தில் நடித்தேன். நல்ல கதையோடு நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று யாராவது வந்தால் அப்போது அது பற்றி யோசிப்பேன். ஆனால் வேலையை விடாமல் விடுமுறை எடுத்து நடித்துக் கொடுப்பேன். காரணம் முழுநேர நடிகையாக நான் விரும்பவில்லை. என்றார்.

மூலக்கதை