ஏ.ஆர்.ரகுமானின் தண்ணீர் கீதம் வெளியானது

தினமலர்  தினமலர்
ஏ.ஆர்.ரகுமானின் தண்ணீர் கீதம் வெளியானது

உலகம் முழுக்க இருக்கும் பிரச்சினை தண்ணீர். 3வது உலகப்போர் நடக்குமானால் அது தண்ணீர் பிரச்சினைக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள். இந்த நிலையில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் விதமாக பாடலாசிரியர் ப்ரசூன் ஜோஷியுடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி உள்ள பாடல் பாணி ஆன்தெம் (தண்ணீர் கீதம்). இந்த பாடல் நேற்று இணையதளத்தில் வெளியானது. 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இணைந்து பாடியுள்ளனர்

பாடல் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளதாவது: நாம் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர் பற்றாக்குறை. தண்ணீரைச் சேமித்து, பாதுகாக்கவில்லை என்றால் நாம் பலவற்றை இழக்க வேண்டியிருக்கும் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு வலியுறுத்தும் விதமாக இப்பாடலை நானும் ப்ரசூன் ஜோஷியும் இணைந்து உருவாக்கியுள்ளோம்.

தண்ணீர் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு அடித்தளத்தை அமைப்பது மிக அவசியம். தண்ணீர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? போன்றவற்றையெல்லாம் மக்களுக்கு கவனமுடன் நினைவூட்ட வேண்டும். இப்பாடலைப் பாடியிருக்கும் அனைத்துக் குழந்தைகளின் குரல்களும் மாற்றத்தை எதிர்பார்க்கும் நமது இளைஞர்களின் குரல். என்கிறார் ரகுமான்.

மூலக்கதை