என் பேவரைட் துல்கர் சல்மான் : சுதா கொங்கரா

தினமலர்  தினமலர்
என் பேவரைட் துல்கர் சல்மான் : சுதா கொங்கரா

கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்ற சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தின் வெற்றி மூலம் முன்னணி இயக்குனர்கள் வரிசைக்கு உயர்ந்துள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. இந்தநிலையில் சமீபத்தில் மலையாள மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது பேவரைட் நடிகர் என்றால் அது துல்கர் சல்மான் தான் என பதில் கூறி ஆச்சர்யப்படுத்தி உள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, மம்முட்டி, மோகன்லால் இருவர் படங்களையும் தவறாமல் பார்ப்பேன் என்றாலும் துல்கர் சல்மான் படங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

துல்கர் சல்மானின் ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பும் கதைகளை தேர்ந்தெடுக்கும் விதமும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. அவரது தோல்வி படங்களைகவனித்தால் கூட, அதில் தன்னுடைய நூறு சதவீத பங்களிப்பை சரியாக கொடுத்திருப்பார் என துல்கர் சல்மானை தனக்கு பிடிப்பதற்கான காரணங்களையும் கூறியுள்ளார் சுதா கொங்கரா..

மூலக்கதை