வெப்சீரிஸுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பிரித்விராஜ்

தினமலர்  தினமலர்
வெப்சீரிஸுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பிரித்விராஜ்

மலையாள திரையுலகில் இந்த கொரோனா தாக்கம் முற்றிலும் நீங்காத நிலையிலும் பிசியாக நடித்துக்கொண்டு இருப்பவர் என்றால் அது நடிகர் பிரித்விராஜ் தான். தவிர சினிமாவில் புதிய முயற்சிகளுக்கு முதல் ஆளாக நின்று வரவேற்பு கொடுப்பவரும் கூட. அதனால் தான் இத்தனை பிஸியான நிலையிலும் கூட வெப்சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள பிரித்விராஜ், தனது நண்பரும் இயக்குனருமான சங்கர் ராமகிருஷ்ணனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

பைஜு ஆண்டனி என்பவர் எழுதிய 'ஷேடோஸ் லை' என்கிற பிக்சன் நாவலை தழுவித்தான் இந்த வெப் சீரிஸ் உருவாக இருக்கிறதாம். கடந்த இரண்டு மாதங்களாக இதற்கான ஸ்க்ரிப்ட் பணிகளை முடித்து வைத்துவிட்டாராம் சங்கர் ராமகிருஷ்ணன். ஏற்கனவே சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்' என்கிற ஆந்தாலாஜி படத்திலும், புதிய முயற்சியில் அவர் இயக்கிய பதினெட்டாம்படி என்கிற படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தவர் தான் பிரித்விராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை