துபாயில் புதிய பிளாட் வாங்கிய மோகன்லால்

தினமலர்  தினமலர்
துபாயில் புதிய பிளாட் வாங்கிய மோகன்லால்

த்ரிஷ்யம்-2 படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு கடந்த பத்து நாட்களுக்கு முன் துபாய் கிளம்பி சென்றார் மோகன்லால். அங்கே ஐபிஎல் கிரிகெட் இறுதிப்போட்டியை நேரில் கண்டு ரசித்த அவர, துபாயில் தற்போது ஓய்வெடுத்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தையும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேசமயம் மோகன்லால் துபாய் சென்றது, புதிதாக ஒரு கிரிக்கெட் அணையை வாங்குவதற்காகத்தான் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் துபாய் சென்றதற்கு முக்கிய காரணம் அங்கே புதிய பிளாட் ஒன்றை வாங்குவதற்காகத்தான் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

துபாய் டவுன்டவுனில் 51 அடுக்குகள் கொண்ட அந்த கட்டடத்தில், தான் வாங்கிய புதிய பிளாட்டில் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. குறிப்பாக மோகன்லாலை திறநோட்டம் என்கிற படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் அசோக் குமார், இந்த வீட்டின் முதல் விருந்தாளியாக வருகை தந்து மோகன்லாலை நெகிழ வைத்துள்ளார். துபாய் விமான நிலையத்தில் இருந்து 17 நிமிட பயணத்தில் மோகன்லாலின் புதிய பிளாட்டை அடைந்துவிட முடியும்..

மூலக்கதை