ராஷ்மிகாவுக்கு கூகுள் சூட்டிய மகுடம்

தினமலர்  தினமலர்
ராஷ்மிகாவுக்கு கூகுள் சூட்டிய மகுடம்

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்கிற ஒரே படத்தின் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றவர் ராஷ்மிகா மந்தனா அதை தொடர்ந்து தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு மொழிகளிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.. இந்தநிலையில் இந்த 2020ஆம் வருடத்தில் தேசிய அளவில் அனைவரையும் கவனம் ஈர்த்து தேடவைத்தவர் என்கிற மகுடத்தை கூகுள் வழங்கியுள்ளது.

ஆம்.. கூகுள் தேடுபொறியில் 'National Crush of India 2020' என்கிற வார்த்தைகளை உள்ளீடு செய்து தேடினால், ராஷ்மிகாவின் பெயரையும், அவர் குறித்த விபரங்களையும் காட்டுகிறது கூகுள். இந்தவருடம் பரபரப்பாக பேசப்பட்ட பாலிவுட் நடிகைகளை கூட, கூகுள் தேடலில் ராஷ்மிகா ஓவர்டேக் செய்துவிட்டார் என்பது உண்மையிலேயே சாதனை தான்.

மூலக்கதை