கொரோனா தொற்றில் இருந்து குடும்பத்துடன் தப்பிய சல்மான்கான்

தினமலர்  தினமலர்
கொரோனா தொற்றில் இருந்து குடும்பத்துடன் தப்பிய சல்மான்கான்

கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்குள் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்றின் பாதிப்பு ஓரளவு குறைந்தது போல தென்பட்டாலும், இன்னும் முற்றிலுமாக நீங்கிவிடவில்லை.. இந்தநிலையில் சல்மான்கானுக்கு கொரோனா பாதிப்பு என்பது போல ஒரு செய்தி பரவியது.. அதாவது சல்மான்கானின் டிரைவர் மற்றும் அவரது இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாசிடிவ் என்பது உறுதியானது.

இதை தொடர்ந்து சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் நல்லவேளையாக அவர்களுக்கு கொரோனா இல்லை என நெகடிவ் ரிசல்ட் வந்தது. இருந்தாலும், சில நாட்கள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் இரண்டு வாரங்களுக்கு சுய தனிமைப்படுத்தி கொள்ள இருக்கிறாராம் சல்மான்கான், அதேசமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது பணியாளர்களுக்கான சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார் சல்மான்கான்

மூலக்கதை