அமெரிக்காவின் வயதான அதிபர் என்னும் சிறப்பை பெறும் ஜோ பைடன்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவின் வயதான அதிபர் என்னும் சிறப்பை பெறும் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அந்நாட்டின் அதிக வயதுள்ள அதிபர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார்.

1942ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி பிறந்தவர் ஜோ பைடன். இன்னும் இரு மாதங்களில் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள பைடன்தான், அமெரிக்க வரலாற்றிலேயே வயதில் மிகவும் மூத்த அதிபர் என்னும் சிறப்பை பெறுகிறார். 78 வயதாகியுள்ள பைடன், நேற்று (நவ.,20) தனது பிறந்தநாளில் கூட, வழக்கமான பணிகளை மேற்கொண்டு, அடுத்து அரசுப் பொறுப்பேற்பது பற்றி ஜனநாயகக் கட்சியின் உயர் தலைவர்களான நான்சி பெலோசி, சக் ஸ்கமர் ஆகியோருடன் விவாதித்தார்.

அமெரிக்க வரலாற்றிலேயே இதற்கு முன்னர், மிகவும் வயதான அதிபராக ரொனால்ட் ரேகன் இருந்தார். பதவிக்காலம் முடிந்து, வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் போது அவரது வயது, 77 ஆண்டுகள், 349 நாள்கள் ஆகும். இதன்மூலம் 78 வயதை கடந்த பைடன், அந்நாட்டின் அதிக வயதுள்ள அதிபர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார். பதவிக்காலம் முடிந்து வெளியேற உள்ள டிரம்ப், பைடனை விட 4 வயது சிறியவர் ஆவார். துணை அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸ், பைடனைவிட ஏறத்தாழ 20 வயது இளையவர்.

மூலக்கதை