வோடபோன் ஐடியா பங்கு விலை ஏற்றம்

தினமலர்  தினமலர்
வோடபோன் ஐடியா பங்கு விலை ஏற்றம்

மும்பை:பார்தி இன்ப்ராடெல் மற்றும் இண்டஸ் டவர்ஸ் நிறுவனங்கள் இணைந்து, மிகப்பெரிய செல்போன் டவர் கம்பெனியை உருவாக்க உள்ளன. இந்த இணைப்பை அடுத்து, வோடபோன் ஐடியா, பார்தி இன்ப்ராடெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை, நேற்று அதிகரித்தது.

இண்டஸ் நிறுவனத்தில், வோடபோனுக்கு, 11.15 சதவீத பங்குகள் இருப்பதால், இந்த இணைப்பால் அதற்கு, 3,760 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.புதிய டவர் நிறுவனத்தில், வோடபோனுக்கு, 28.12 சதவீத பங்குகளும், பார்தி ஏர்டெல் குழுமத்துக்கு, 36.7 சதவீத பங்குகளும் உள்ளன.இத்தகைய காரணத்தினால், இவற்றின் பங்குகள் விலை நேற்று உயர்வை கண்டது.


வோடபோன் நிறுவன பங்குகள் விலை, 8.31 சதவீதமும், பார்தி இன்ப்ராடெல் பங்குகள் விலை, 19.26 சதவீதமும் அதிகரித்தன. கடந்த வியாழக்கிழமை அன்று சந்தைகள் சரிவைக் கண்ட நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று, 282.29 புள்ளிகள் அதிகரித்து, 43,882.25 புள்ளிகளாக உயர்ந்தது.

இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 87.35 புள்ளிகள் அதிகரித்து, 12,859.05 புள்ளிகளாக உயர்ந்தது.சென்செக்ஸ் குறியீட்டில் அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ், 9 சதவீத விலை உயர்வை கண்டது.

மூலக்கதை