அரையிறுதியில் அமெரிக்க இந்தியர்

தினகரன்  தினகரன்
அரையிறுதியில் அமெரிக்க இந்தியர்

ஏடிபி பைனல்சில் முன்னணி வீரர்கள் மோதும் இரட்டையர் போட்டியும் நடக்கிறது. இரட்டை சகோதரர்களான முன்னாள் டென்னிஸ் வீரர்கள் பாப் பிரையன், மைக் பிரையன் பெயர்களின் 2 பிரிவுகளாக பிரிவுக்கப்பட்டுள்ளனர்.மைக் பிரயைன் பிரிவில்  அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பரி இணை(2வது ரேங்க்), ஜெர்மனியின்  கெவின் க்ரவிட்ஸ், ஆண்ட்ரூஸ் மைஸ் இணை(3வது ரேங்க்) மோதியது. இப்போட்டியில் 3 சுற்றுகளும் டை பிரேக்கர் வரை நீண்ட நிலையில் அமெரிக்க இணை 2-1 என்ற செட்களில்  வென்றது. இந்த வெற்றியின் மூலம் மைக் பிரையன் பிரிவில் 2வது இடம் பிடித்த அமெரிக்க இணை அரையிறுதியை உறுதிபடுத்தியது. ராஜீவ் ராம்(36) அமெரிக்க வாழ் இந்தியர். இதே பிரிவில் முதல் இடம் பிடித்த வெஸ்லி கூல்ஹப்(நெதர்லாந்து), நிகோலா மெக்டிக்(குரோஷியா) இணை(5வது ரேங்க்) ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

மூலக்கதை