ஸ்மித் வருகை இந்தியாவுக்கு பெரிய தலைவலி: மேக்ஸ்வெல்

தினகரன்  தினகரன்
ஸ்மித் வருகை இந்தியாவுக்கு பெரிய தலைவலி: மேக்ஸ்வெல்

இந்திய அணி 2018-19ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விளையாடி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கூடவே டி20தொடரையும் சமன் செய்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியில்  டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் விளையாடவில்லை. இப்போது அணிக்கு திரும்பியுள்ள இருவரும், அடுத்த வாரம் தொடங்க உள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், ‘ஸ்மித் போன்ற ஒருவர் மீண்டும் அணிக்கு திரும்பியது எங்களுக்கு பலமாக இருக்கும். அதே நேரத்தில் இந்தியாவுக்கு பெரிய தலைவலியாக இருக்கும். ஏனென்றால் இந்தியாவுக்கு எதிராக அவர் ரன் குவித்திருக்கிறார். இந்த தொடரிலும் அதை செய்வார். அதேபோல் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய  ரோகித் சர்மா அணியில் இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.  ஆனால் இந்தியா அணியில் ஏராளமான திறமைசாலிகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஐபிஎல் தொடரில் லோகேஷ் ராகுல் ஆட்டம் அசாதாரணமானது ’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை