ரிஷப்கிட்ட சரக்கு இருக்கு: ஹர்பஜன் சப்போர்ட்

தினகரன்  தினகரன்
ரிஷப்கிட்ட சரக்கு இருக்கு: ஹர்பஜன் சப்போர்ட்

இந்திய கிரிக்கெட் அணியில் எம்.எஸ்.டோனிக்கு பிறகு ரிஷப் பண்ட்தான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அந்த நேரத்தில் சஞ்சு சாம்சன், விருத்திமான் சஹா என பல திறமைசாலிகள் இருந்தாலும் நீண்ட கால திட்டமாக இளம் வீரர் ரிஷப்புக்கு வாய்ப்பு தந்தனர். அதிக எதிர்பார்ப்பு காரணமாக அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. யுஏஇ ஐபிஎல் தொடரிலும் பெரிதாக சாதிக்கவில்லை. காயம் வேறு அவரை படுத்தியது. அதே நேரத்தில் சஞ்சு, சஹா கூடவே லோகேஷ் ராகுல் ஆகியோர் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அசத்தினர்.அதனால் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியின் ஒருநாள், டி20 அணிகளில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. சஹா காயமடைந்ததால் டெஸ்ட் அணியில் ரிஷப்புக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வாய்ப்பும் சஹா இப்போது குணமடைந்ததால் பறிபோய் உள்ளது.  உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்தால் அல்லது சஹா, சஞ்சு காயமடைந்தால் ரிஷப்புக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நேற்று, ‘ரிஷப் பந்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட செயல்திறனை வெளியாகவில்லை. இருந்தாலும் அவர் இளைஞர். அவருக்கு நிறைய திறன் உள்ளது. வருங்காலத்தல் சிறப்பாக விளையாடுவார். ஐபிஎல் தொடரில் கூட அவரால் வெற்றிகரமாக செயல்படவில்லை. ஆனால் அவர் தரமான வீரர். விளையாட்டின் 3 வடிவங்களுக்கும் மீண்டு வர விரும்பினால் ரன் குவித்து, திறனை வெளிப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில்  அவரால் அதை செய்ய முடியும் என்று நம்புகிறேன்’ என்று ரிஷப்புக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மூலக்கதை