பீதியை போக்கும் கால்பந்து

தினகரன்  தினகரன்
பீதியை போக்கும் கால்பந்து

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்தான், கொரோனா  பீதிக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டி. இது  குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி,‘ இந்தியாவில் நடைபெறும் ஐஎஸ்எல்  தொடரின் வெற்றிதான் கொரோனா பீதியை போக வைக்கும் என்று நம்புகிறேன். மற்ற  விளையாட்டுகளை நடத்துவதற்கும் வழிவகை செய்யும். பயமில்லாத, இயல்பு  வாழ்க்கையை மீண்டும் பெறுவதுதான் இப்போதைய தேவை’ என்று கூறியுள்ளார்.இந்திய வீரர்களுக்கு நெருக்கடி ஆஸ்திரேலிய  அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ‘ஆஸிக்கு எதிரான கடைசி 3  டெஸ்ட்களில் விராத் கோஹ்லி விளையாடவில்லை. அது இந்திய அணியில் உள்ள மற்ற  வீரர்களுக்கு கூடுதலாக நெருக்கடியை ஏற்படுத்தும். கோஹ்லிக்கு பதில் ரஹானே   கேப்டன் பொறுப்பை ஏற்றால், அதுவும் அவருக்கு கூடுதல் நெருக்கடிதான்’ என்று  கூறியுள்ளார்.இனி வேலை, தேர்வு முக்கியம் பெண்களுக்கான யு 17 பிபா உலககோப்பை கால்பந்து ேபாட்டி  முதல்முறையாக இந்தியாவில் நடைபெற இருந்தது. இம்மாதம் நடத்த இருந்த  போட்டியை கொரோன பீதி கரணமாக பிப்ரவரிக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, மற்ற நாடுகளால் தகுதிச் சுற்றுப் ேபாட்டிகளை நடத்த முடியாததால் போட்டியை ரத்து செய்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா இப்போது அறிவித்துள்ளது. இந்திய வீராங்கனைகளில் பலர் கூலி வேலை செய்பவர்கள், பள்ளிகளில் படிப்பவர்கள்.  போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்விபட்ட அவர்கள், ‘உலக கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டது வருத்தமாக இருக்கிறது. இனி வேலை, தேர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் முக்கியம். கூடவே தொழில்முறை ஆட்டக்காரராக தொடர உள்ள வாய்ப்புகள் குறித்து யோசிப்போம். ஆனால் எந்த நிலையிலும் கால்பந்து விளையாடுவதை நிறுத்த மாட்டோம்’ என்று கூறியுள்ளனர்.

மூலக்கதை