சோர்வாக இருக்கிறேன்-மெஸ்ஸி

தினகரன்  தினகரன்
சோர்வாக இருக்கிறேன்மெஸ்ஸி

உலக கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாட சொந்த நாடான அர்ஜென்டினா சென்்ற லியோனல் மெஸ்ஸி, மீண்டும் ஸ்பெயின் திரும்பியுள்ளார். லா லிகா கால்ந்து தொடரில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் மெஸ்ஸி, ‘இந்த அணியில் எல்லாவற்றுக்கும், எப்போதும் பிரச்னையாக இருப்பதால் நான் சோர்வாக இருக்கிறேன். போததற்கு 15மணி நேர விமான பயணத்திற்கு பிறகு இங்கு வந்தேன்.  இங்குள்ள வரி அதிகாரிகள் எனக்காக காத்திருக்கின்றனர். இது பைத்தியகார தனமானது’ என்று புலம்பியுள்ளார். இந்த ஆண்டு பார்சிலோனா அணியில் இருந்து விலக முயன்றார் மெஸ்ஸி. அதனால் சட்டப் பிரச்னை ஏற்படும் என்றதால் அதே அணியில் தொடர்கிறார். போதாதற்கு அணியின் பயிற்சியாளர், நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு. கடந்த சீசன் காலியிறுதியில் பேயர்ன் மியூனிக்கிடம் மோசமான தோல்வி. ஸ்பெயினில் வரி ஏய்ப்பு  செய்ததாக குற்றசாட்டு, சிறை தண்டனை, அதை தவிர்க்க அபராதம் என பல பிரச்னைகள் அவரை சுழற்றி அடித்துக் கொண்டு இருக்கின்றன.

மூலக்கதை