எல்லோரும் ‘நெகட்டிவ்’

தினகரன்  தினகரன்
எல்லோரும் ‘நெகட்டிவ்’

நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கிரிக்கெட் தொடர் நவ.27ம் தேதி தொடங்குகிறது. அதற்காக கடந்த மாதம்  நியூசிலாந்து சென்ற வெ.இண்டீஸ் வீரர்கள், அணி ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. தனிமைப்படுத்தலை முடித்த அவர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளனர். அவர்கள் குயின்ஸ் டவுனின் நியூசி-ஏ அணி்க்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளனர். அதேபோல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விட்டு நியூசிலாந்து சென்றுள்ள எஞ்சிய நியூசி, வெஇண்டீஸ் வீரர்களுக்கும் ‘நெகட்டிவ்’ என்று சோதனை முடிவுகள் சொல்கின்றன. இருப்பினும் அவர்கள் 25பேரும் இப்போது 12 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப் படுத்தல் முடியும் போதும் மீண்டும் சோதனை செய்யப்படும்.

மூலக்கதை