4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது

வாஷிங்டன்: நாசாவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று அதிகாலை 5. 57 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட், 2003ம் ஆண்டு வெடித்த காரணத்தால் நாசா, தனியார் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில் நாசாவின் 2 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக கடந்த மே மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் விண்ணுக்கு மனிதர்களை பத்திரமாக அனுப்பி திரும்பி கொண்டு வர முடியும் என்ற சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டது.இதையடுத்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5. 57 மணிக்கு நாசாவின் 4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றது. ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் பெயர் டிராகன்.

இதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மைக் பென்ஸ் மற்றும் கரேன் பென்ஸ் தொடங்கி வைத்தனர். இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்களும் சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம் செய்தனர்.

இவர்களில் க்ளோவர் என்பவர் மட்டுமே நடுத்தர வயதுக்காரர். மற்ற 3 வீரர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

ரெசிலியன்ஸ் எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும்.

இந்த 4 பேரும் ஏற்கனவே அங்கிருக்கும் 2 ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர் ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்.

க்ரூ டிராகன் ரெசிலியன்ஸ் என்ற விண்கலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் விண்கலமாகும். ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பிரிந்து பயணிக்க தொடங்கியதும், ராக்கெட் பூஸ்டர் பூமிக்குத் திரும்பி, கடலில் ஒரு கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதனை மறுபடியும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் ட்விட்டர் பதிவில், அறிவியலின் ஆற்றலுக்கும், நமது புதுமை, புத்தி கூர்மை மற்றும் உறுதியை பயன்படுத்துவதன் மூலம் எங்களால் சாதிக்க முடியும்’ என்று பாராட்டினார்.

அதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதை ”பெரியது” என்றார்.

.

மூலக்கதை