பீகாரில் மீண்டும் பாஜ கூட்டணி ஆட்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகாரில் மீண்டும் பாஜ கூட்டணி ஆட்சி

பாட்னா: பீகாரில் ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் அக்கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியின் முதல்வர் நிதிஷ் குமாரின் பதவி காலம் முடிவுற்றதால், 243 இடங்களுக்கான பேரவை தேர்தல் கடந்த அக். 28, நவ.

3, நவ. 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றன.

அத்துடன் வால்மீகி நகர் மக்களவை தொகுதிக்கும் இடைத் ேதர்தல் நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக 57. 05 சதவீத வாக்குகள் பதிவாகின.

முன்னதாக தேர்தல் களத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளின் தேசிய ஜனநாயகக்  கூட்டணியுடன் இணைந்து ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான்  ஆகிய கட்சிகளும் தேர்தலை எதிர்கொண்டன. இக்கூட்டணிக்கு ஐக்கிய ஜனதா தளம்  தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதிஷ் குமாா் முதல்வர் வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார்.



இந்த கூட்டணிக்குப் போட்டியாகக் ராஷ்ட்ரீய ஜனதா தளம்  தலைமையிலான மகா கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய  கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அக்கூட்டணியின் முதல்வர்  வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர்  லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி, முதல்வர் நிதிஷ்குமார் மீதான அதிருப்தியால் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டது. இதனால், பெரும்பாலான தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவியது.

மொத்தமாக 243 தொகுதிகளிலும் 3,500க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆளுங்கட்சி எதிராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறின.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 122 தொகுதிகளைக்  கைப்பற்றும் கூட்டணி எது? என்ற எதிர்பார்ப்பு தேசிய அளவில் எழுந்துள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும், அதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.



இதற்காக, பீகாரின் 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஹெச். ஆர். நிவாசா தலைமையில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முக்கியமாக, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சிகளின் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் கூட தடை விதிக்கப்பட்டது. காலை 12 மணி நிலவரப்படி நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 132 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி 99 இடங்களில் முன்னிலை வகித்தது. சிராக் பாஸ்வானின் எல்ஜிபி கட்சி 5 இடங்களிலும், மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

பீகாரில் மொத்த இடங்கள் 243. அதில் 122 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்கலாம்.

தற்போது பாஜ கூட்டணி 130 இடங்களுக்கு மேல் முன்னிலையில் இருப்பதால் பாஜ கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.



.

மூலக்கதை