நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள்; துருக்கி, கிரேக்கத்தில் ‘மினி’ சுனாமி பேரலை: இடிபாடுகளில் சிக்கி 23 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள்; துருக்கி, கிரேக்கத்தில் ‘மினி’ சுனாமி பேரலை: இடிபாடுகளில் சிக்கி 23 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்

இஸ்தான்புல்: துருக்கி, கிரேக்க நாடுகளில் ஏற்பட்ட ‘மினி’ சுனாமி பேரலையால் 23 பேர் பலியாகினர். 780க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரநிலை மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. துருக்கியின் ஏஜியன் கடல்பகுதியை மையமாக வைத்து நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் 7. 0 பதிவான நிலநடுக்கம் காரணமாக துருக்கியின் இஸ்மிர் நகரில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.



சில நொடிகளே நீடித்த நிலநடுக்கம் காரணமாக இஸ்மிர் நகரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள் சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து விழுந்தன. நிலநடுக்கம் காரணமாக இஸ்மிர் மாகாணத்தின் சில பகுதிகளிலும், கிரேக்க தீவான சமோஸிலும், செஸ்மி மற்றும் செஃபெரிஹிசர் பகுதிகளில் சுனாமி அலைகள் ஊருக்குள் புகுந்தன.

துருக்கியின் மேற்கில் கடலோரப் பகுதிகளில் 21 பேர் பலியானதாகவும், கிரேக்க தீவான சமோஸில் இரண்டு பேர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை மொத்தம் 23 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



துருக்கியில் மட்டும் குறைந்தது 786 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவ மீட்புக் குழுக்கள் இஸ்மிரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மத்திய சாகர் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 என்றும், அதன் மையப்பகுதி கிரேக்கத்தின் வடகிழக்கில் சமோஸ் தீவு என்றும் கூறி உள்ளது.

அதேநேரத்தில், துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரநிலை மேலாண்மை துறை வெளியிட்ட அறிவிப்பில்,

துருக்கி கடற்கரைக்கும் கிரேக்கத்தின் சமோஸ் தீபகற்பத்திற்கும் இடையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

நிலநடுக்கத்தின் மையம் ஏஜியன் கடலில் 16. 5 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை