வெறுப்பு பேச்சுக்கள் - பேஸ்புக், டுவிட்டர், கூகுள் சி.இ.ஓ.,க்களுக்கு சிக்கல்

தினமலர்  தினமலர்
வெறுப்பு பேச்சுக்கள்  பேஸ்புக், டுவிட்டர், கூகுள் சி.இ.ஓ.,க்களுக்கு சிக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சமூக ஊடகங்களில் வெறுப்பு பேச்சுக்கள், போலி செய்திகள் பரப்பப்படுவது குறித்து பேஸ்புக், டுவிட்டர், கூகுள் சி.இ.ஓ.,க்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனா தொற்றால் இறப்பு மற்றும் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நவ.,3-ல் அதிபர் தேர்தல் நிறைவு பெறுகிறது. நூற்றாண்டுகளில் இல்லாத வகையில் 7 கோடி மக்கள் தபால் ஓட்டுக்கள் மூலம் முன்னதாகவே தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இது 2016-ல் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் பாதியாகும். அதே போல் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தின.

ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினர் தங்கள் தலைவர்களுக்கு ஆதரவாக மாறி மாறி மோதிக்கொண்டனர். போலியான செய்திகளை பரப்பினர். இது சர்ச்சையாகியுள்ளது. அது பற்றி விசாரிப்பதற்கு செனட்டின் வர்த்த குழு முன்னணி சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக், டுவிட்டர், கூகுளுக்கு சம்மன் அனுப்பியது. அந்நிறுவன சி.இ.ஓ.,க்களான மார்க், ஜாக், சுந்தர் பிச்சை இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்படும் கருத்துக்கள், தகவல்கள் மீது நிறுவனங்கள் எந்தளவு கட்டுப்பாடுகளை கொண்டுள்ளன என்பது பற்றி இதில் ஆய்வு செய்யப்படும்.

மூலக்கதை