உதயநிதி மீது 5 பிரிவுகளில் கோவை போலீசார் வழக்கு

தினமலர்  தினமலர்
உதயநிதி மீது 5 பிரிவுகளில் கோவை போலீசார் வழக்கு

கோவை : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி உட்பட தி.மு.க.,வினர் மீது வெவ்வேறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த தி.மு.க.,வினர், 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி உட்பட தி.மு.க.,வினர் ஒன்பது பேர் மீது, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் தடை உத்தரவை மீறுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, 'நீட்' தேர்வு குறித்து கிராமப்புற மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதவிர, அத்துமீறி மேடை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஏழு பேர் மீது, மற்றொரு வழக்கு பதியப்பட்டது.

மூலக்கதை