குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மீது மர்ம நபர் செருப்பு வீச்சு

தினகரன்  தினகரன்
குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மீது மர்ம நபர் செருப்பு வீச்சு

காந்திநகர், :- குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் மீது மர்ம நபர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் எட்டு இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் நவ. 3ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், வதோதரா மாவட்டத்தின் கர்ஜன் தாலுகாவில் உள்ள புரோலி கிராமத்தில் நிருபர்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மர்ம நபர் ஒருவர் அவர் மீது திடீரென செருப்பை வீசினார். அவரது முகத்திற்கு சில சென்டிமீட்டர் தொலைவில் இருந்த சேனல்களின் மைக்ரோ போன் மீது செருப்பு விழுந்தது. செருப்பு வீசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை