தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை கைது செய்தது அமலாக்கத்துறை..!!

தினகரன்  தினகரன்
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை கைது செய்தது அமலாக்கத்துறை..!!

திருவனந்தபுரம்: கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கேரள தங்க கடத்தல் தொடர்பாக அமலாக்கப்பிரிவு - சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரனுக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. தங்க கடத்தல் தொடர்பாக  வழக்கில் கேரள ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன், வழக்கின் முக்கிய நபர்களான சுவப்னா சுரேஷூடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் கூட்டு ஆலோசனை மேற்கொள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்ததாக கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த  ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து சிவசங்கரனிடம் சுங்க துறை மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தனித் தனியே விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சிவசங்கரனை கொச்சி சுங்கத்துறை அலுவலகத்திற்கு  வரவழைத்து அக்டோபர் மாத தொடக்கத்தில் 2 நாட்களுக்கு தலா 11 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப்  நாயர் ஆகியோர் விசாரணையின் போது அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், சிவசங்கரன் தொடர்பாக ஏற்கனவே கைப்பற்றப்பட்ட  தடயங்கள்  அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் அவர்களை கைது செய்யும் திட்டம் இல்லை என்று கொச்சி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொச்சி நீதிமன்றத்தில் தங்க கடத்தல் தொடர்பாக அமலாக்கப்பிரிவு- சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் தலைமைச் செயலர் சிவசங்கரனுக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, திருவனந்தபுரத்தில் ஆயூர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்து அமலாக்கத்துறை  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூலக்கதை