அம்பானி குடும்பத்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி

தினகரன்  தினகரன்
அம்பானி குடும்பத்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: அம்பானி சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இசட்-பிளஸ் பாதுகாப்பை விலக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என மேல் முறையீடு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அம்பானி சகோதரர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் வழங்கப்பட்ட இசட்-பிளஸ் பாதுகாப்பு அட்டையை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை ஹிமான்ஷு அகர்வால் என்பவர் தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியதாவது; அம்பானிகளுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்புப் பத்திரத்தை திரும்பப் பெறுமாறு மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அம்பானி குடும்பத்தால் பணம் செலவு செய்ய இயலும் என்பதற்காக அவர்களுக்கு இசட்- பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.ரிலையன்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியாவின் ஜிடிபி-யில் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது அவசியம் என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியதை ஏற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதை உறுதிசெய்வது அரசின் கடமையாகும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

மூலக்கதை